பாட்டி வட 'சுட்ட' கதை
நம்ம எல்லாருக்கும் காக்கா நரிட்ட ஏமாந்த கதை தெரியும். அந்த கதைய பாட்டி வட சுட்ட கதைனு சொல்றோம். ஆனா உண்மையிலயே, பாட்டிட்டயிருந்து வடைய சுட்டது காக்காதான். அப்ப அது காக்கா வட 'சுட்ட' கதை. அப்ப பாட்டி வட 'சுட்ட' கதை?
நான் சொல்றேன்...........
ஒரு ஊர்ல ஒரு காக்கா வட பொறிச்சுட்டிருந்துச்சாம் ( எப்புடி, சுட்டுச்சுனு சொல்ல மாட்டோமுல்ல ). அப்ப அந்த வழியா வந்த பாட்டிக்கு வடை வாசம் மூக்க துளைச்சுசாம். அந்த பாட்டி, எப்படியாவது இந்த காக்காட்டயிருந்து வடைய சுட்டுடனும்ன்னு ஒரு ப்ளான் போட்டாங்க. அப்ப அந்த பக்கமா ஒரு நரி வந்துச்சாம். அத பார்த்த பாட்டிக்கு ஒரே குஷி. "சிக்கிட்டான்யா சின்னப்ப்ய குள்ளநரி", அப்படின்னு சொல்லிக்கிட்டே நரி கிட்ட போனாங்களாம்.
பாட்டி நரிகிட்ட போய், "பாரு, பாரு! காக்காட்ட எவ்ளோ வடை, இந்த தடவையும் காக்காவ ஏமாத்த முடிஞ்சா நல்லாருக்கும்" , அப்டின்னு சொல்லி ஆச காட்டினாங்க. நரிக்கு மைல்டா டவுட் வந்தாலும், வட மேலயிருந்த ஆசையால காக்காவ ஏமத்த முடிவு பண்ணுச்சு.
நரியும் காக்காகிட்டப் போய் ஹலோ சொல்லிச்சு.நரிய பார்த்ததும் காக்கா உஷார் ஆயிடுச்சு. "என்ன வேணும்னு?'' கேட்டுச்சு.நரியும் சும்மா உன்ன பார்த்துட்டு போலாம்னு வந்தேன்''னு சொல்லிச்சு.இவுங்க பேசிட்டிருந்த கேப்ல பாட்டி,காக்கா வடையை சுட்டுட்டாங்க.அத பார்த்த நரிக்கு எல்லாம் புரிஞ்சுருச்சி.எப்படியாவது பாட்டிய ஏமாத்துணும்னு நெனைச்சுது.அது பாட்டிகிட்ட போய் ,''காக்கா வருது,காக்கா வருது'' அப்டின்னு கத்துச்சு.பாட்டி பயந்துபோய் திரும்பி பார்த்தாங்க. நரி வேகமா செயல்பட்டு பாட்டி கையிலிருந்த வடையை லபக்னு சுட்டுருச்சு.பாட்டி ஏமாந்து போய்ட்டாங்க.
பாட்டிக்கு இப்பல்லாம் தூரத்துல பாடுற காக்கா சத்தம் கூட ''ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே''னு கேக்குதாம்.