Wednesday, 1 February 2012

புதிர் கணக்கு-4


மகேசனிடம் 30 மணிபர்ஸுகள் 3 கலர்களில் இருந்தன
அதில்:
      10 நீல  மணிபர்ஸுகளில்       ரூ-300ம்
      10மஞ்சள்  மணிபர்ஸுகளில்     ரூ-200ம்
      10பச்சை மணிபர்ஸுகளில்       ரூ-100ம் வைத்திருக்கிறார்,
எனில்,அவர் தம் 3 குழந்தைகளுக்கும் மணிபர்சுகளின் எண்ணிக்கை சமமாகவும், தொகை சமமாகவும் எப்படிப் பிரித்துக் கொடுப்பார்?

கொசுறாக சில வேடிக்கை கணக்குகள்:
1. இருபத்தொன்பதில் 29-ஐ கழித்தால் மீதி 9 வரும் எப்படி?
2. 40-லிருந்து 10-ஐ 4முறை கழித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன?
3. 1961- இந்த எண்ணின் சிறப்பு என்ன? 


8 comments:

  1. முதல் குழந்தைக்கு 3 நீலம், 4 மஞ்சள், 3 பச்சை
    இரண்டாம் குழந்தைக்கு 3 நீலம், 4 மஞ்சள், 3 பச்சை
    மூன்றாம் குழந்தைக்கு 4 நீலம், 2 மஞ்சள், 4 பச்சை

    சரியா

    கொசுறு
    1. ???
    2. 30தான் (எத்தனைமுறை கழித்தாலும், அதாவது 40-10, 40-10, 40-10, 40-10 - சரியா?)
    3. 1961 - தலைகீழாக படித்தாலும் 1961 என்றுதான் தெரியும்(தலைவர் சுஜாதாவும் இந்த பெயரில் நாவல் எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்).

    ReplyDelete
  2. 1) தப்புத் தப்பா கணக்குப் போட்டா அப்படித்தான் வரும்.

    2) 40ல இருந்த 10ஐ எத்தனை தடவை கழித்தாலும் 30தான் வரும்.

    3) தலகீழ நின்னு படிச்சாலும் அந்த நம்பர்தான் தெரியும்.

    ReplyDelete
  3. கஷ்டமான 3 கேள்விங்களுக்கு நான் பதில் சொல்லிட்டதால, ஈஸியான முதல் கணக்குக்கு நீங்களே பதில் சொல்லிடுங்க

    ReplyDelete
  4. வரதராஜுலு.பூ,
    விடை சரியே.
    கொசுறு:கொடுத்த 2பதில்களும் சரியே
    முதல் புதிருக்கும் முயற்சியுங்கள்.உங்களால் முடியும்.
    ந்ன்றி.

    ReplyDelete
  5. யோசிப்பவரே,
    எளிதான புதிருக்கு விடை கூறிவிட்டீர்கள்.
    தப்புத் தப்பா யோசிச்சா புதிர் தப்புத்தப்பாத்தான் தெரியும்.

    ReplyDelete
  6. மணி பர்சுகள் விகிதம்: 3 நீலம், 5 மஞ்சள், 1 பச்சை (3*20+5*20+1*10 =200 ரூ)
    4 3 2 (4*30+3*20+2*10 =200 ரூ)
    3 2 7 (3*30+2*20+7*10 =200 ரூ)
    மொத்தம் 10 10 10 600

    பி.கு: ஒவ்வொரு நிற மணி பர்சிலும் ரூபாய்கள் சமப் பங்காக உள்ளன: நீல பர்சு ஒவ்வொன்றிலும் 30ரூ, என்றவாறாக;

    கொசுறுகள் பிறகு.

    ReplyDelete
  7. கொசுறு கணக்குகள்

    1. தெரியவில்லை
    2. 40 - லிருந்து 10-ஐ எத்தனை முறை கழித்துப் பார்த்தாலும் வரும் விடை 30 தான்.
    3. 1961 -ஐ மேலிருந்து பார்த்தாலும் 1961 தான்

    ReplyDelete
  8. சிவக்குமார் கொசுறு 1ல் உங்கள் விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete