Thursday 26 January 2012

கலைமொழி-6

புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது. இந்தக் கலைமொழி ஒரு கேள்வியுடன் அமைந்துள்ளது.அதற்குரிய விடையையும் சேர்த்தே சொல்லுங்கள் 

சென்றக் கலைமொழியை சுடச்சுட சமைத்தவர்:பூங்கோதை.
 ஆற அமர சமைத்தவர்கள்:முத்து,தமிழ் பிரியன்,அரசு.
 தப்புத்தப்பாக சமைத்தவர்கள்:யோசிப்பவர்,ராமசாமி.
 சென்றக் கலைமொழிக்கான விடை:மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் பின் வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும் பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும் பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார் .
நன்றி.
10அம்மா.

Thursday 19 January 2012

கலைமொழி-5

                                                  கலைமொழி-5
புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.


இக்கலைமொழியை முடித்தவுடன் உங்கள் மனமும் வயிறும் நிறைந்ததா?

Wednesday 18 January 2012

புதிர் கணக்கு-3

                                                    வயதைக் கண்டுபிடி 
தருமன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் என 5 சகோதரர்கள்.பீமன்,அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் ஆகிய நால்வரின் வயதின் கூட்டுத்தொகை 224.
பீமன்,அர்ச்சுனன் ஆகிய இருவரின் வயதும் சேர்ந்து 92.
அர்ச்சுனன் வயதோடு நகுலனின் வயதை சேர்த்தால் 112.
நகுலன்,சகாதேவன் இருவர் வயதின் கூட்டுத்தொகை 132
சகாதேவன் பீமனை விட 30 வயது பெரியவன் என்றால்
தருமனைத் தவிர ஏனைய  4 பேரின் தனித் தனி வயதென்ன?

புதிர் கணக்கு-2

                                          எத்தனை இளநீர்
அசுவத்தாமன் சில இளநீர்கள் பறித்து வந்தான்.அவற்றில் பாதியையும் கூடுதலாக ஒன்றையும் கார்த்திக்கிற்கு கொடுத்தான்.மீதியில் பாலாவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தான்.மீதி இருந்ததில் விச்சுவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தால்,மீதம் அசுவத்தாமன் கையில் ஒரு இளநீர் மட்டுமே இருந்தது என்றால்,

அசுவத்தாமன் பறித்த இளநீர் எத்தனை?

Tuesday 10 January 2012

புதிர் கணக்கு

                                              நவக்கிரஹ கணக்கு

நீங்கள் கணக்கில் புலியா? நரியா?

இந்த கணக்கை போடுவதற்கு புலியாக இருக்க வேண்டியதில்லை.
   
                                                                       மகேசன் கோயிலுக்கு செல்லும் வழியில்,பூந்தோட்டத்தில் சில பூக்களை பறித்தான்
                                              அதில் 100  பூக்களை பிள்ளையாருக்கு அர்ச்சித்தான்.மீதி உள்ள பூக்களை ஒரு குளத்து நீரில் நனைத்தான்.அப்பூக்கள் 2 மடங்கு ஆனது.பிறகு அதன் மீது திருமஞ்சன நீர் தெளிக்க 5 மடங்கு ஆனது
                                                             மொத்த பூக்களையும் 10 ஆக பிரித்து ஒரு பங்கான 200 பூக்களை எடுத்துக் கொண்டான்.மீதியுள்ள 9 பங்கையும் நவக்கிரஹங்களுக்குச் சூடினான்.

                                                                                      
மகேசன் பறித்த பூக்கள் எத்தனை?

Monday 9 January 2012

கலைமொழி-4

கலைமொழி-4
புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது.
மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம்.
இடவலமாக மாற்ற முடியாது.
இது கடினமாக இருப்பதாக பலர் கருதுவதால் ஒரு க்ளு: இது ஒரு பாரதியார் பாடல்.


கலைமொழி-3க்கான விடை பகிர்ந்தவர்கள்: யோசிப்பவர்,அகிலாஶ்ரீராம்,பூங்கோதை மூவருக்கும் வாழ்த்துக்கள்.விடுகதைக்கான விடையையும் சொல்லியிருக்கலாமே, அகிலா, நன்றி.

Tuesday 3 January 2012

கலைமொழி-3




இது ஒரு விடுகதை.பதிலையும் சேர்த்தே சொல்லுங்கள்.
கலைமொழி-2 விடை:மனித வாழ்க்கையில் விதிக்கப்பட்டவாறு நடந்துதான் தீரும் என்ற எண்ணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையை உதறி தள்ளினால்தான் பாடுபட்டு உழைக்க முடியும். புதியவர்களுக்காக:மேலே உள்ள கட்டங்களில் சிறிய பத்தி(paragraph) கலைந்துள்ளது.எழுத்துக்களை மேலிருந்து கீழாக(only columnwise)மட்டுமே மாற்றமுடியும்.இடம்வலமாக(horizontally))மாற்ற முடியாது.இதிலேயே க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். கண்டுபிடித்து விடைகளைக் கூறுங்கள். கலைமொழி-2ஐ கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர்,பூங்கோதை,மனு,முத்து.இவர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.