Showing posts with label கலைமொழி. Show all posts
Showing posts with label கலைமொழி. Show all posts

Friday, 2 November 2012

புதிர் கணக்கு-6

மீண்டும் புதிர் கணக்குகளுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இதை எழுதியவர்:  பானுசேகரன்.

உங்களுக்கு கொடுப்பவர்:  10அம்மா.( மிகவும் எளிதான ஒன்று.)


மொத்தம் பொம்மைகள்=      48

3 பிரிவுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 3 பிரிவுகளும் எண்ணிக்கையில் சமமாக இல்லை.

2 வ்து பிரிவில் எத்தனை பொம்மைகள்  உள்ளதோ, அதே அளவு பொம்மைகள்

1 வது பிரிவிலிருந்து எடுத்து 2 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.


பிறகு 3 வது பிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதேஅளவு

பொம்மைகள் 2 வது பிரிவிலிருந்து எடுத்து  3 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
   
பிறகு 1 வதுபிரிவில்  எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதே அளவு 

பொம்மைகள் 3 வது பிரிவிலிருந்து எடுத்து 1 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.        

இதன் பிறகு 3 பிரிவுகளிலும் பொம்மைகள் சமமாக இருக்கின்றன.




ஆரம்பத்தில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பொம்மைகள் இருந்தன?                                                                     

Tuesday, 30 October 2012

சொல் கலை-6(போனஸ்)

இதைப்  போட்டு முடித்தவுடன் ஏதோ கதை கேட்பது போல் இருந்தால் நான் பொறுப்பல்ல..








1.
2.
3.
4.
5.


இது சொல்ல வயது வேண்டுமா?

சொல்கலை-5

இந்த முறை  2 சொல்கலை போட்டிருக்கிறேன்.

இது தீபாவளிக்கு

அடுத்தது தீபாவளி போனஸ்:

போனஸை கண்டிப்பாக போடுங்கள்.இல்லாவிட்டால் கிடைக்காது.




1.
2.
3.
4.


தீபாவளி ஏன்?

Monday, 29 October 2012

கலைமொழி-13


பேச்சு வழக்கில் வரும் இக்கலைமொழியை விரைவில் போட்டுவிடுவீர்கள்  என்று தெரியும்.போட்டுவிட்டு யாரையும் கடித்து விடாதீர்கள்.தீபாவளி நேரமாகவேறு  இருக்கிறது

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!


Tuesday, 22 May 2012

கலைமொழி-12

அனைவருக்கும் வணக்கம்


சென்றக் கலைமொழிக்கான விடை: சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்


 இந்தக் கலைமொழியில் வரும் பாடலைப் பாடியவர்’ கணீர் ’ குரலுக்கு சொந்தக்காரர்.இவர் பாடலை வானொலியில் சமீபத்தில் கேட்டேன்.கலைமொழியிலும் போட்டுவிட்டேன்.

இனி விடை கண்டுபிடிப்பது உங்கள் கையில்.


சென்றக் கலைமொழிக்கு விடை கூறியவர்கள் :தமிழ் பிரியன், முத்து, பூங்கோதை,மாதவ், சாந்தி,யோசிப்பவர், நாகராஜன்.பங்களித்த அனைவருக்கும் நன்றி.


Tuesday, 24 April 2012

கலைமொழி-11


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து 
மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

இந்த கலைமொழியை முடித்தவுடன் நாம் முத்துவை நினைக்காமல் 
இருக்கமுடியாது.


சென்றக் கலைமொழிக்கான விடை: எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்  நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று




சென்றக் கலைமொழிக்கான விடை கூறியவர்கள்: ஹரிஹரன், மீனுஜெய், முத்து, யோசிப்பவர், அரசு, நாகராஜன், ஹரி, கவி, மாதவ், தமிழ் பிரியன்.

சரியான விடை கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.

Monday, 2 April 2012

கலைமொழி-10


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

சென்றக் கலைமொழிக்கான விடை:முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:முத்து, நாகராஜன், அந்தோணி, பூங்கோதை, யோசிப்பவர், தமிழ் பிரியன், மீனுஜெய்.

விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.


10அம்மா.